Header Ads

  • BREAKING



    வைகை அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு சரிவு.


    தென் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான வைகை அணையின் நீர்மட்டம் 23 அடியாக சரிந்துள்ளதையடுத்து, மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து 23 அடியாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரில் மூன்றில் ஒரு மடங்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அதிலும் 18 அடிக்கு மேல் அணையில் வண்டல் மண் மட்டுமே படிந்துள்ளது. இதற்கிடையே மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாதநிலை உள்ளது. தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் குடிநீர் தேவைக்கே போதாத நிலையில், இந்த ஆண்டு வைகை அணையை திறந்து விடுவதில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad