கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 64-வது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்,சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‘எந்தப்பக்கம்’ என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து பெற்றார்.
சிறந்த தமிழ்படத்துக்கான விருது ஜோக்கர் படத்துக்கு கிடைத்தது.
விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’24’ படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகள் கிடைத்தன.
சிறந்த நடிகருக்கான விருதை ரூஸ்தம் இந்திப் படத்தில் நடித்த அக் ஷய் குமார் பெற்றார்.
கருத்துகள் இல்லை