Header Ads

  • BREAKING



    வல்லாரை உண்பான், எல்லோரையும் வெல்வான்.


    அறிவுக்கு விருந்து திருக்குறள்.
    அறிவுக்கு மருந்து வல்லாரை இலை.
    ஒவ்வொருவர் விட்டிலும் திருக்குறள் இருக்கவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறளை எடுத்து ஏதாவது வாக்கியத்தை படித்துக்கொண்டிருப்போமானால் மனதுக்கு நல்ல தெளிவும் அறிவும் உண்டாகும்.
    அதுபோலவே நாம் உண்ணும் கீரைகளில், எல்லா கீரைவகைகளிலும் ஒருவித மருத்துவ குணம் உண்டு.
    அதில் வல்லாரை கீரையில் அறிவு சார்ந்த மருத்துவம் குணம்   நிறையவேஉண்டு.
    ஆகவே வல்லாரையை  தேங்காய் – புளி – பருப்பு சேர்த்து துவயலாகவும்,, பருப்பு சேர்த்து கூட்டாகவும், காரக்குழம்பாகவும், இன்னும் பலவிதமாக சமையல் செய்து அடிக்கடி உண்டு வந்தோமானால் அறிவுசார்ந்த உணவு. மூளைக்கும் பலம்.
     வல்லாரை உண்பான், எல்லோரையும் வெல்வான்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையில் வல்லாரை வடை செய்து சுவைக்க செய்து, நீங்களும் சுவையுங்கள். வல்லாரை வடையை எளிய முறையில் செய்யும் விதம்.
    வல்லாரை வடை!


    தேவையானவை:
    வல்லாரை கீரை - 1 கட்டு,
    கடலை மாவு - 100 கிராம்,
    சிறிய வெங்காயம் - 100 கிராம்,
    ச.எண்ணெய் - 100 மில்லி கிராம்,
    கொத்தமல்லி இலை, சீரகம், ப.மிளகாய்  இஞ்சி சிறு துண்டு

    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
    செய்முறை:
    கடலை மாவுடன், பொடியாக நறுக்கிய வல்லாரை கீரை, வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி சிறு துண்டு தே.அ  உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசையவும். 

    பின், வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசைந்த மாவை, வடைபோல் தட்டி, நன்கு பொறித்து எடுத்தால், வல்லாரை வடை ரெடி. இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
    இந்த வடையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும்; அஜீரண கோளாறு சரியாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad