Header Ads

  • BREAKING



    மதுபானக் கடையை சூறையாடிய விவகாரம் – 30 பேர் மீது வழக்குப்பதிவு.


    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தில் மதுபாட்டில்களை சூறையாடி உடைத்ததாக, 30 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அருப்புமேடு ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை முற்றிலுமாக அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
    இந்நிலையில், தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, நேற்று அக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர், கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை சூறையாடி உடைத்தனர்.
    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 30 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காட்பாடி காவல் நிலைய போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad