Header Ads

  • BREAKING



    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜர்.


    தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் வருமான வரித்துரையினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்தது. இதற்காக நேற்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று காலை ரம்யா, வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு வருமான வரித்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad