Header Ads

  • BREAKING



    உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவை தேர்தல் வரும்: விஜயகாந்த்.


    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவைக்குத்தான் விரைவில் தேர்தல் வரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
    இது தொடர்பாக திருநெல்வேலியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கல்விக் கண் திறந்தவர் காமராஜர். எனவே, அவரது சொந்த ஊர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர் காமராஜர். சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தவர் எம்ஜிஆர். அதன்பிறகு தமிழகத்தில் கல்வியை கெடுத்தது திமுகவும், அதிமுகவும்தான்.
    ஓபிஎஸ், இபிஎஸ் பற்றி கேட்காதீர்கள். நல்ல விஷயங்களை கேளுங்கள். கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை. என்னிடம் கறுப்புப் பணம் இல்லை. சோதனை பற்றிய கவலையும் இல்லை. தவறு செய்தவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.
    ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளேன். யாரும் அரசியலுக்கு வரலாம். எல்லோருக்கும் உரிமை உள்ளது. அரசியலுக்கு வந்தால் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அதனை சமாளிக்க வேண்டும்.
    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவை தேர்தல்தான் விரைவில் வரும். தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதால் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து'' என்று விஜயகாந்த் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad