Header Ads

  • BREAKING



    நீதிமன்ற காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு.


    விழுப்புரம் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள பல்வேறு அமைச்சுப் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

    விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    விழுப்புரம் மாவட்ட நீதித் துறையில், தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணியில் காலியாக உள்ள நகல் படிப்பாளர்-2, நகல் பரிசோதகர்-7, முதுநிலை கட்டளைப் பணியாளர்-16, இளநிலை கட்டளைப் பணியாளர்-17, அலுவலக உதவியாளர்-26, கணினி இயக்குநர்-3 ஆகிய பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

    கல்வித் தகுதி, வயது வரம்பு, இனசுழற்சி விவரம் போன்ற விவரங்களுக்கும், விண்ணப்பப் படிவம், தேர்வு நேர்காணல் அழைப்பு உள்ளிட்ட தகவல்களை ecouts.gov.in/tn/viluppuram என்ற இணைய தளத்தில் அறியலாம்.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் மே 15 ஆகும்.

    விண்ணப்பங்களை "முதன்மை மாவட்ட நீதிபதி, முன்மை மாவட்ட நீதிமன்றம், விழுப்புரம்' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad