Header Ads

  • BREAKING



    விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது.



    விழுப்புரம் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
    போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் விழுப்புரம் தலைமை போக்குவரத்து அலுவலகம் எதிரில் எழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
    இதேபோல் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad