Header Ads

  • BREAKING



    உலகம் முழுவதும் 100 நாடுகளின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல்.


    உலகில் உள்ள எந்த கம்ப்யூட்டரையும் ஹேக் செய்யக்கூடிய மென்பொருளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை அண்மையில் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. அந்த மென்பொருளை பயன்படுத்தி வான்னகிரை எனும் வைரசை உருவாக்கி அதனை இமெயில் மூலமாக 100 நாடுகளின் பிரபலமான நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஹேக்கர்கள் அனுப்பியுள்ளனர். வந்திருப்பது வியாபார ரசீது, பணி வாய்ப்புகள், பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான மின்னஞ்சல்கள் என நினைத்து அந்த மின்னஞ்சல்களை திறந்த கம்ப்யூட்டர்களில் வான்னகிரை வைரஸ் பரவியுள்ளது. இதனால் அந்த கம்ப்யூட்டர்கள் முடங்கி தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திய ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்களில் பரவிய வான்ன கிரை வைரசை அகற்ற வேண்டும் என்றால் 300 முதல் 600 டாலர்கள் வரை பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். சிலர் தங்களது கம்ப்யூட்டர்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஹேக்கர்களிடம் பணமும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad