விவேகம் டீசர் சாதனை: ரசிகர்கள் உற்சாகம்.
நடிகர் அஜீத்குமாரின் ’விவேகம்’ பட டீசரை, வெளியான மூன்றே நாளில் ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர்.
அஜீத், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கும் படம், ’விவேகம்’. சிறுத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த 11-ம் தேதி வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே இதற்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்போது வெளியான 3 நாட்களிலேயே இந்த டீசர் சாதனை படைத்திருக்கிறது. அதாவது இந்த டீசரை ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே விவேகம் டீசர், கபாலி டீச்அர் சாதனையை முறியடித்து இணையதளத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கி வருவது அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை