Header Ads

  • BREAKING



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது – தேர்தல் ஆணையம்.


    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற ஆம்ஆத்மி கட்சியின் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பரத்வாஜ், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து செயல் விளக்கம் அளித்தார். ஒன்றரை நிமிடத்தில் ஒரு கட்சி சின்னத்திற்கு அளித்த வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் விதத்தில் மாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிரகரித்துள்ளது. மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் மட்டுமே இது போன்று மோசடிகளை செய்வது சாத்தியம் என்றும், உண்மையான மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad