Header Ads

  • BREAKING



    வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டை நிரூபித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,


    வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதை டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரப் பரத்வாஜ் நிரூபித்தார். ஆனால் இது மாதிரி எந்திரம் தான் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். சட்டப்பேரவை தொடங்கியதும் மாதிரி எந்திரத்தை வைத்து பேசிய அவர், இதில் சில ரகசிய குறியீடுகளை பயன்படுத்தினால், எந்தக் கட்சிக்கு அதிக ஓட்டுகள் விழ வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானிக்க முடியும் என்று கூறினார். பின்னர் எந்திரத்தில் உள்ள ரகசிய குறியீடுகளை மாற்றிய அவர், வாக்குகளைப் பதிவு செய்தார். முடிவில் ஆம் ஆத்மிக்கு 10 வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில் பதிவான வாக்குகள் 2 ஆகவும், பா.ஜ.க.வுக்கு 3 வாக்குகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் பதிவான வாக்குகள் 11 ஆகவும் இருந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், மாதிரி எந்திரங்களில் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும் என்றும் தங்களுடைய எந்திரங்களில் இதுபோன்று ஒரு போதும் தவறு நடக்காது என்றும் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad