Header Ads

  • BREAKING



    பொதுமக்களை கவரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பேருந்து நிறுத்தம்.


    ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தண்ணீர் பாட்டில்களால் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. பாம்பூ ஹவுஸ் இந்தியா என்ற நிறுவனம், மூங்கில் கழிகள் மற்றும் தீர்ந்துபோன பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு இந்த பேருந்து நிறுத்தத்தை வடிவமைத்துள்ளது. பொதுவாக ஒரு பேருந்து நிறுத்தத்தை அமைக்க 2 முதல் 3 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தை அமைக்க வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானதாக தெரிவித்த அந்த நிறுவனம், வித்தியாசமான தோற்றம் மற்றும் சூற்றுப்புறச் சூழல் சார்புத் தன்மை காரணமாக இந்த பேருந்து நிறுத்தம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதாக கூறியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad