ரஜினியை ஏன் அரசியலுக்கு அழைக்கிறீங்க? கட்ஜூ கேள்வி.
மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ரஜினியிடம் தீர்வு இல்லாதபோது அவரை ஏன் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி தனது பிளாகில் அவர் கூறியிருப்பதாவது:
"தென் இந்திய மக்கள் மீது நான் உயர்ந்த மதிப்பீடு கொண்டுள்ளேன். ஆனால் அவர்களின் சினிமா நட்சத்திரங்களை போற்றி வணங்கும் முட்டாள்தனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் 1967-68 காலகட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தமிழ் நண்பர்களுடன் சிவாஜி படம் பார்க்கச் சென்றிருந்தேன். முதல் காட்சியில் சிவாஜியின் கால்களை காட்டியபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இப்போது ரஜினிகாந்த்தை அதே ஆரவாரத்துடன் பார்க்கின்றனர். சிலர் அவர் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.
ஆனால் ரஜினியிடம் அப்படி என்னதான் இருக்கிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ வசதிகள் இன்மை, விவசாயிகள் பிரச்சினை இவற்றில் எதற்காவது ரஜினிகாந்திடம் தீர்வு இருக்கிறதா? என்னைப் பொருத்தவரை இதில் எந்தப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை