Header Ads

  • BREAKING



    பிரான்ஸ் செய்தி நிறுவனங்களிடம் இழப்பீடு கேட்டு பிரிட்டன் அரச தம்பதிகள் வழக்கு.


    பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேத்தே மிடில்டனின் மேலாடையற்ற புகைப்படங்களை வெளியிட்ட பிரான்ஸ் செய்தி நிறுவனங்களிடம் 16 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு கேட்டு அரச தம்பதிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கேத்தே மிடில்டன் தெற்கு ஃபிரான்சின் கடற்கரைப் பகுதியில் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்தபோது தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை பிரான்சின் க்ளோசர் மற்றும் லா ப்ரொவின்ஸ் இதழ்கள் வெளியிட்டன. இந்தப் படங்கள் பிரிட்டனில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அந்தப் பத்திரிகைகள் மீது வில்லியம் கேத்தே மிடில்டன் ஆகியோர் இழப்பீடு கேட்டு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad