டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வது ஏன் என போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
சென்னை திருமுல்லைவாயலில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தாயார் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் பிரசன்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குற்றமா என்று கேள்வி எழுப்பினார். அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், கைது செய்யப்பட்ட 21 பேரும் ஜாமீன் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஜாமீன் மனுவாக தாக்கல் செய்தால், நாளையே அதை விசாரித்து ஜாமீன் வழங்குவதாக கூறிய நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை