Header Ads

  • BREAKING



    பேருந்தில் அட்டைப் பெட்டிகளில் கடத்தப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள்.


    Galapagos என்ற ராட்சத கடல் ஆமைகளின் 29 குட்டிகளை அட்டைப் பெட்டிகளில் வைத்து கடத்திய கடத்தல்காரர்களிடமிருந்து மீட்ட பெரு நாட்டின் வனத்துறையினர் அவற்றின் வாடிய நிலையால் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர். அவற்றின் உடல்நலத்தை சார்லஸ் டார்வின் ஆய்வு மையத்தில் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இதில் நோயுற்று இருந்த இரண்டு ஆமைகள் உயிரிழந்துவிட்டன. அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் இதர 27 கடல் ஆமைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக இவற்றின் ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின்னர் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அவற்றுக்கு நல்ல உணவளிக்கப்பட்டு அவை எடை கூடியதும் அங்குள்ள மார்கரிட்டா வனவிலங்குப் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை ஆமைகளால்தான் அறிஞர் சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad