உலகின் மிக உயரமான ரயில் பாலம் இந்தியாவில் கட்டப்படுகிறது.
உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயருடன் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ((Chenab)) செனாப் பாலம், வெடிகுண்டுகளால் தகர்க்கப்படாத உறுதியுடன் கட்டப்படும் உலகின் முதல் பாலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய பாதுகாப்பு ஆலோசனையின் அடிப்படையில் இந்த பாலம் கட்டப்படுகிறது. Zone-5 அளவிலான பூகம்பம் நிகழ்ந்தாலும், சக்தி வாய்ந்த டி.என்.டி ((TNT)) வெடிமருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் பாதிக்கப்படாத வகையில் இந்த பாலம் கட்டப்படுவதாக கொங்கன் ரயில்வே தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த பாலம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை