Header Ads

  • BREAKING



    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதில் புதிய உலக சாதனை படைத்தார் இந்திய பெண்.



    எவரெஸ்ட் சிகரத்தில் ஐந்து நாட்களில் இரண்டு முறை ஏறிய முதல் பெண் என்ற பெருமையை இந்தியர் ஒருவர் பெற்றுள்ளார்.
    அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஷூ ஜம்சென்பா ((Jamsenpa)) என்ற 32 வயதான பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இவர் மலையேற்ற வரலாற்றில் இரண்டு உலக சாதனைகளைச் செய்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஐந்து முறை ஏறிய முதல் பெண் என்ற சாதனையைச் செய்த இவர், தற்போது ஐந்து நாள் இடைவெளியில் இரண்டுமுறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். அன்ஷூ கடந்த 2011 ஆம் ஆண்டு இதே போல் 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டார்.
    எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள் பலத்த பனிக்காற்று, பனிச்சரிவு, கடுங்குளிர் போன்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக அவற்றை சாமாளிக்க வேண்டும் என்று சொல்கிறார் சாதனைப் பெண் அன்ஷூ.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad