ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து.
சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு விரைவு ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்டிரலில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது எஞ்சின் மற்றும் இரண்டு பெட்டிகள் ரயிலின் தண்டவாளத்தை விட்டு திடீரென கீழே இறங்கியது. இதனை அடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விரைந்து வந்த அதிகாரிகள், தடம் புரண்ட ரயிலின் என்ஜின் உட்பட்ட மூன்று பெட்டிகள் துண்டிக்கப்பட்டு, பின்னர் மீதமுள்ள அந்த ரயிலின் 20 பெட்டிகளை மாற்று ரயில் மூலம் திருவாலங்காடு வரை இழுத்து சென்று, அங்கிருந்து ஈரோட்டிற்கு இயக்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே அதிகாரிகள் செய்தனர். விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் மெயில்,சென்னை-மும்பை ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக மாற்றுப்பாதை மூலம் இயக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை