Header Ads

  • சற்று முன்



    5 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்.


    தூத்துக்குடியில் இருந்து லட்சத்தீவுகளுக்கு கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில், மத்தியபாகம் காவல்நிலைய போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் அதிவேகமாக வந்த டாடாஇண்டிகா காரை வழிமறித்து சோதனை செய்தபோது, காரில் போதைபொருளான ஹெராயின் கடத்திவந்தது தெரியவந்தது.
    இதனையடுத்து காரில் இருந்தவர்களை, போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் ஹெராயினைக் கடத்தி வந்தவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த அகஸ்டின் தேன்ராஜ், சதீஷ்குமார், திருச்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பது தெரியவந்தது. ஹெராயினை சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி ஆம்னி பேருந்து மூலம் திருச்சி கொண்டு வந்து, பின்னர் காரில் தூத்துக்குடி கொண்டு வந்தது தெரிய வந்தது.
    அந்த ஹெராயினை 15 நாட்களுக்குப் பிறகு கப்பல் மூலம் லட்சத்தீவுகளுக்கு கடத்த மூவரும் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைதுசெய்த போலீசார், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ ஹெராயின், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த, மதுரையில் இருந்து போதை பொருள் தடுப்பு போலீசார் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad