அரிசோனா தேசிய வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், 4,000 ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
அரிசோனா மாநிலத்தில் உள்ள பிரஸ்காட் தேசிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதை அடுத்து வனப்பகுதிக்கு அருகில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இரவுபகலாக ஈடுபட்டு வந்தாலும், இதுவரை 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக யாவப்பாய் (Yavapai) கவுண்டி ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை