மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழங்கில் மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பான மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதிக்க, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, கால்நடை சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்புக் குரல் கிளம்பின. கேரள சட்டசபையிலும், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை