பிரேசில் அதிபர் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு.
பிரேசில் நாட்டு அதிபர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்த மைக்கேல் டெமர், இறைச்சி நிறுவனம் ஒன்றிடம் இருந்து 11 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு விநியோக உரிமை வழங்கினார் என்பது குற்றச்சாட்டு. டெமர் மீது லஞ்ச வழக்கு தொடர அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்திருந்தனர். லஞ்சம் கேட்ட குரல் பதிவை ஆதாரமாகக் கொண்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் பிரேசிலில் ஆளும் ஜனநாயக இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை