Header Ads

  • BREAKING



    MLA-க்கள் பண விவகாரம், நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவு


    எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தமிழக சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 
    அதிமுக எல்எல்ஏக்கள் குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு அளித்தார். குதிரை பேரம் நடைபெற்றதால் ஆட்சியை கலைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் அப்போது அவரிடம் வலியுறுத்தினார். மேலும் இந்த பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலினின் இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஒன்றில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு வாக்களிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்தே ஸ்டாலின் ஆளுநரிடம் இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தார். 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad