தனியார் பங்களிப்புடன் நவீனப்படுத்த ரயில் நிலையங்கள் ஏலம்.
தனியார் பங்களிப்புடன் நவீனப்படுத்தும் திட்டத்துக்காக, கான்பூர் ரயில் நிலையத்துக்கு 200 கோடி ரூபாயும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு 150 கோடி ரூபாயும் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், பூனே, தானே, விசாகப்பட்டனம், ஹவுரா, போபால் உள்ளிட்ட நாட்டின் 25 முக்கிய ரயில் நிலையங்களை தனியார் பங்களிப்போடு நவீனப் படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ரயில் நிலையங்களை ஏலம் விட திட்டமிட்டுள்ள அரசு, முதல்கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர், அலகாபாத் ரயில் நிலையங்களை தேர்வு செய்துள்ளது.
ஏலத்தொகையாக,கான்பூர் ரயில் நிலையத்துக்கு 200 கோடி ரூபாயும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு 150 கோடி ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏலம், ஆன்லைன் மூலம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. ஏல முடிவுகள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை