Header Ads

  • BREAKING



    31 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி38 ராக்கெட்.


    காட்ரோசாட் மற்றும் 30 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி.-சி 38 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலையில் தொடங்கியது.
    நாளை காலை 9.29 மணி அளவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி.சி 38 ராக்கெட்டானது, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்களையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூருல் இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் என்.ஐ.யூ.சாட் என்ற செயற்கைக்கோளையும் சுமந்து செல்கிறது.
    புவியின் மேற்பரப்பை கண்காணித்து சுற்றுச்சூழல், விவசாயப் பரப்பு குறித்த தகவல்களை வழங்கும் கார்டோசாட் 2 சீரிசின் 6-வது செயற்கைகோளும் இதில் ஏவப்படுகிறது. இவற்றின் மொத்த எடை 955 கிலோ கிராம் ஆகும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவாஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 38 ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதற்கான 28 மணிநேர கவுண்டவுன் அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad