லண்டன் தீ : தூக்கி எறியப்பட்ட குழந்தையை கேட்ச் பிடித்த இளைஞர்.
லண்டன் தீ விபத்தின் போது 10ஆவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தையை இளைஞர் ஒருவர் தனது கைகளில் தாங்கிப் பிடித்து காப்பாற்றினார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள க்ரென்பில் டவர் எனும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 6 பேரை பலிகொண்ட இந்த விபத்தில் இருந்து குழந்தை ஒன்று உயிர் பிழைத்துள்ளது. கட்டடத்தின் 10ஆவது மாடியில் இருந்த பெண் ஒருவர் குழந்தையைக் காப்பாற்ற எண்ணி, அதை ஜன்னல் வழியாக கீழே வீசி எறிந்தார். தூக்கி எறியப்பட்ட அந்த குழந்தையை கூட்டத்தில் இருந்து விலகி வந்த இளைஞர் ஒருவர் பத்திரமாக தனது கைகளில் தாங்கினார். குழந்தை காப்பாற்றப்பட்டது குறித்த செய்திகள் பிரிட்டன் ஊடகங்களை ஆக்கிரமித்தன.
கருத்துகள் இல்லை