Header Ads

  • சற்று முன்



    தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.


    தமிழகத்தில் எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெறும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டுக்குச் செல்லும் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார்.
    சட்டப்பேரவை கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?
    எப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவில்லையோ, அப்போதே சட்டப்பேரவையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி அதனை செய்ய முன் வரவில்லை. எனவே, எதிர்க்கட்சி என்றமுறையில் தொடர்ந்து சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும் அதனை வலியுறுத்தினோம். இப்போதாவது சட்டப்பேரவையை கூட்டுவது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.
    இதன்மூலம், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இந்தக் தொடர் அமைந்திருக்கிறது. ஆனால், இப்போது அதிமுகவில் இருக்கின்ற சூழ்நிலைகளைப் பார்க்கின்றபோது, அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.
    இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடு எந்தவகையில் இருக்கும்?
    திமுகவை பொறுத்தவரையில் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்களின் முக்கிய பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வோம்.
    தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று கூறப்படுகிறதே?
    தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன் மூலமாக ஒரு நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதை எதிர்பார்த்து தான் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கின்றீர்களா?
    எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad