Header Ads

 • BREAKING  பதவியேற்று ஓராண்டு நிறைவு: முதல்வர் - ஆளுநர் மோதலால் புதுவை மக்கள் பாதிப்பு.


  புதுச்சேரியில் துணைநிலை ஆளுந ராக கிரண்பேடியும், முதல்வராக நாராயணசாமியும் பதவியேற்று ஓராண்டாகியுள்ள நிலையில், அவர்கள் இருவர் இடையிலான மோதலால் மக்கள் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித் துள்ளனர்.
  புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்ற நிலையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றார்.
  பதவியேற்கும் முன்பாகவே அதிகாரிகளுடன் கலந்துரை யாடலை கிரண்பேடி தொடங்கி னார். குறைதீர் கூட்டம் என்ற வழக்கமே இல்லாத புதுச்சேரியில் மக்கள் குறைகளைத் தெரிவிக்க ஏற்பாடுகளைச் செய்து ஆளுநர் மாளிகையை திறந்தார். அத்துடன் ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணை யத்தை முழுமையாக பயன்படுத்த தொடங்கினார்.
  முதல்வர், அமைச்சர்கள் நிதி கோரி டெல்லி சென்றால், ஆளுந ரும் தனியாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை அதே நேரத்தில் சந்திக்க தொடங்கினார். இருதரப்பும் டெல்லியை அணுகி னாலும் புதுச்சேரிக்கு எந்த நிதியும் கிடைத்தபாடில்லை.
  துறைமுகம் தூர்வாரும் பணி, ஓய்வூதியம் வழங்குவது, அதிகாரி கள் இடமாற்றம் என பல விஷயங் களில் கிரண்பேடி நேரடியாக தலையிட தொடங்கியதால் அவருக் கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் தீவிர மடைந்தது. இதனால் பல திட் டங்கள் நிறைவு செய்வதில் இழு பறி ஏற்பட்டது. ஆளுநர், முதல் வர் தரப்பு என இருதரப்பாக அதிகாரிகள் பிரிந்தனர்.
  இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் அரசு ஒதுக் கீட்டு இடங்களில் முறைகேடு நடப்பதாகக் கூறி கலந்தாய்வு நிறை வடையும் நாளில் களத்தில் இறங் கினார் ஆளுநர் கிரண்பேடி. நேரடி யாக மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று அதிரடி காட்டினார்.
  தன்னால்தான் சேர்க்கை நடந்த தாக ஆளுநர் குறிப்பிட, அமைச்சர வையின் முயற்சியால்தான் முதல் முறையாக தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் பெறப்பட் டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
  மத்திய அரசு போதிய நிதி ஒதுக் கீடு செய்யாத நிலையில் கடும் நிதிச் சுமையில் புதுச்சேரி அரசு உள்ளது. பள்ளி-கல்லூரி கல்விக் கட்டணம், துறைமுகம் தூர்வாரும் விவகாரம், போக்குவரத்து பிரச் சினை, தொடர் கொலைகள் என பல பிரச்சினைகளைப் புதுச்சேரி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
  புதுச்சேரியிலுள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் 3.36 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 1.80 லட்சம் ரேஷன் கார்டு கள் ஏழை மக்களுக்கான சிவப்பு ரேஷன் கார்டுகளாகும்.
  ரேஷனில் தற்போது 20 கிலோ அரிசி மட்டும் அனைத்து தரப்பின ருக்கும் விநியோகிக்கும் திட்டம் இருக்கிறது. அதையும் சரியாக அரசு விநியோகிக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் எம்எல்ஏக்களிடம் புகார் தெரிவித்தால் இலவச அரிசி திட்டத்துக்கான கோப்பு ஆளுநர் வசம் முடக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆளுநர் தரப்போ சிவப்பு ரேஷன் கார்டு களுக்கு மட்டுமே இலவச அரிசி தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
  ஓய்வூதியம்
  புதுச்சேரி மகளிர் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவைகள், கணவ னால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெரும்பாலும் மாதந்தோறும் 7-ம் தேதிக்குள் கொடுக்கப்பட்டு விடும். ஆனால் கடந்த 4 மாதங்களாக சரி யான நேரத்தில் ஓய்வூதியம் கிடைப் பதில்லை.
  இந்த உதவித் தொகைக்காக மாதம் ரூ. 27.84 கோடி வங்கிகளில் துறை தரப்பில் டெபாசிட் செய்ய ஆளுநர் ஒப்புதல் அவசியம் என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆளுநர் தரப்பிலிருந்து ஓய்வூதி யம் பெறுவோர் விவரத்தை கணக் கெடுத்து தருவது உட்பட அதில் முழுவிவரத்தை கோரியுள்ளதாக வும் அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடு கின்றனர். இதனால் 4 மாதமாக இத் திட்டத்தில் சுணக்கம் நிலவுகிறது.
  கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.23 கோடி விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டும், ஆளுநர் கிரண் பேடி அனுமதி தரவில்லை. அர சுக்கும் ஆளுநருக்கும் இடையில் கோப்புகளை அனுப்புவதும், அதில் விளக்கம் கேட்பதும் என இக்கோப்பு சுற்றிச்சுற்றி வருகிறது.
  கல்விக் கட்டணம்
  சிறப்புக்கூறு நிதியில் இருந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டது. அது தொடர்பான கோப்பினை அரசு ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், கருத்து மாறுபாடு ஏற்பட்டதால் இறுதி முடிவு எடுக்க கோப்பை டெல்லிக்கு கிரண்பேடி அனுப்பிவிட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
  இப்படியாக ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. பதவியேற்று ஆளுநர் கிரண்பேடிக்கு ஓராண்டாகியுள் ளது. அதேபோல் புதுச்சேரி அரசும் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கிரண்பேடி - நாராயணசாமி இடையே ‘யாருக்கு அதிகாரம்?' என்ற போட்டியே தொடர்வதால், நலத்திட்டங்கள் எதுவும் முறையாக செயல்படுத்தப்படாமல் மக்கள் ஏங்கி நிற்கின்றனர்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad