Header Ads

  • சற்று முன்



    போர்ச்சுக்கல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 2 ஸ்பெயின் விமானங்கள்.


    போர்ச்சுகல் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஸ்பெயின் நாட்டின் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் கொட்டப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயினால் சில இடங்களில் விமானம் பறக்க முடியாத அளவுக்கு வானில் கரும்புகை சூழ்ந்துள்ளது. தலைநகர் லிஸ்பனில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ரோகோ கிராண்டி வனப்பகுதியில் சனிக்கிழமை மாலை 3 மணிக்குத் தீ பரவத் தொடங்கியது.
    தீயை அணைக்கும் பணியில் 160 வாகனங்களும் 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வனப்பகுதியில் உள்ள மரத்தில் மின்னல் தாக்கியதால் முதலில் தீ பற்றி இருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் மொத்தம் 61 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad