Header Ads

  • சற்று முன்



    இன்று 3 எம்எல்ஏ ஆதரவு: தினகரன் மகிழ்ச்சி.


    டிடிவி தினகரனை இன்று மேலும் மூன்று எம்எல்ஏ-க்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
    டிடிவி தினகரன் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி அளித்தார். ஆனால் எம்எல்ஏ-க்களோ நாங்கள் டிடிவி பக்கம் தான் என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொருவராக, டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் டிடிவி-க்கு ஆதரவாக 11 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஆனால் நேற்றைய நாள் முடிவில் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 27 ஆக ஆனது. இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்.எல்.ஏ, நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். தற்போது வரை டிடிவி-க்கு ஆதரவாக 30 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி அரசு சற்று கலக்கத்தில் உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad