நீண்ட கால விடுப்பில் சென்றார் ஊபர் கால்டாக்சி நிறுவனத் தலைவர்.
ஊபர் கால் டேக்சியின் தலைவர் டிராவிஸ் கலானிக் பல்வேறு நெருக்கடிகளின் காரணமாக, நீண்டகால விடுப்பில் சென்றுள்ளார்.
சர்வதேச கால் டாக்சி நிறுவனமான ஊபர் மீது முன்னாள் ஊழியர்கள் ஊழல் மற்றும் பாலியல் புகாரை கூறிவந்தனர். நிர்வாகத்தின் மேலாண்மை மற்றும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ததில், நிறுவனத்தில் ஊழல்கள் நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சில பொறுப்புகள் வேறு நிர்வாகிகளுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நெருக்கடியின் காரணமாக அதன் தலைவர் டிராவிஸ் கலானிக் விடுப்பில் சென்றுள்ளார். அவர் எவ்வளவு காலம் நிறுவனத்தை விட்டு விலகி ஓய்வில் இருக்கப்போகிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை