Header Ads

  • சற்று முன்



    நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழகத்தின் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை – விஜயபாஸ்கர்.


    நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சட்டப்பேரவையில் இன்று தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு நீட் தேர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக்கொண்டு வந்தார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் நகர மாணவர்களுடன் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
    மேலும் நீட் தேர்வு மாநில உரிமையை மத்திய அரசு பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறிய அவர், நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனவும் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
    இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை மத்திய உள்துறை இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவிலை என்று கூறினார்.
    இதனால் தமிழக அரசின் மசோதாவை சட்டமாக்கி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாத சூழல் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு முடிவுகள் வரும் 26 தேதி வெளியாக இருப்பதால் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
    அப்போது இது தான் ஆட்சி நடத்தும் முறையா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற டெல்லியில் போய் உட்கார்ந்து இருக்கவேண்டாமா? என்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். மேலும் நீட் தேர்விற்கு விலக்கு கோரும் விவகாரத்தில் விஜயபாஸ்கரின் நடவடிக்கை ஆபரேஷன் சக்சஸ் – பேஷன்ட் டெட் என்ற வகையில் அமைந்துவிட்டதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad