விஸ்வரூபம்-2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு துருக்கியில்.
விஸ்வரூபம் 2 படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் துருக்கி சென்றுள்ளார்.
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உட்பட பலர் நடித்த படம், ‘விஸ்வரூபம்’. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் கமல்ஹாசன். இதை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து வந்தார். இந்நிலையில் படத்தை கமல்ஹாசனே இப்போது வெளியிட இருக்கிறார். படத்தின் 95 சதவிகித காட்சிகள் முடிவடைந்துவிட்டன. சில பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருக்கிறது. படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ள கமல்ஹாசன், சென்னை திரும்பியதும் ராணுவம் தொடர்பான சில காட்சிகளை படமாக்க இருக்கின்றனர். அதோடு படம் முடிகிறது. படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை