Header Ads

  • BREAKING



    பழைய O.S-களில் இனி செயல்படாது வாட்ஸ்ஆப்.


    பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60, உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால் இந்த வகை ஃபோன்களில் வரும் ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  
    கடந்த 2009-ஆம் ஆண்டு வாட்ஸ்-அப் தொடங்கப்பட்ட காலத்தில், பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவின் இயங்குதள அமைப்புகள் சந்தையில் 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்தின. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்கள் 25 சதவீதத்திற்கும் குறைவாக இயங்கின. மொபைல்ஃபோன்களின் உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது நோக்கியா. அதேபோல், பிளாக்பெர்ரி மொபைல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. என்னதான் முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நோக்கியா, பிளாக்பெர்ரியின் நிலைமை மாறியது. இதனால், இந்த வகை ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்களின் விகிதம் குறையத் தொடங்கியது. இந்நிலையில். வாட்ஸ்-அப் அறிவித்துள்ள இந்த முடிவு பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவிற்கு மேலும், பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad