Header Ads

  • BREAKING



    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை யானை தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.


    தேனி மாவட்டம் கம்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை யானை தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விளைநிலங்கள் உள்ளதால் காட்டு யானை அட்டகாசம் வருடம் முழுவதும் இப்பகுதியில் உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் பல முறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.
    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு மறைந்து நின்ற காட்டு யானை திடீரென்று தாக்கியது.
    இதில் அழகேசன் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் முருகன், அவரது மனைவி வீருசி மற்றும் மகன் விக்னேஷ் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இதுதொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
    மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கும் வரை இறந்த சிறுவன் உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad