Header Ads

  • BREAKING



    AirIndia நிறுவனத்தை கையகப்படுத்த TATA குழுமம் திட்டம்.


    ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம் மத்திய அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்க மத்திய அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
    பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய உள்நாட்டு விமான சேவையில் 35 விழுக்காடு அளவிற்கு பங்களிப்பு அளித்து வந்த ஏர் இந்தியா தற்போது 14 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பங்களிப்பை அளித்து வருகிறது.
    கடந்த பத்து ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ஆண்டில் கூட லாபத்தை பார்க்கவில்லை. மேலும் ஏர் இந்தியாவை தொடர்ந்து இயக்க ஆண்டுதோறும் மத்திய அரசு குறிப்பிட்ட அளவில் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.
    இந்த தொகையை வேறு திட்டங்களுக்கு செலவிட்டாலும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதும் மத்திய அரசு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்தும் பேசி வருகிறது. இந்நிலையில் தற்போது ஏர் – இந்தியா நிறுவனத்தைக் கையகப்படுத்தும் வகையில் அதன் 51 சதவீத பங்குகளை வாங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் – இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் மத்திய அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad