Header Ads

  • சற்று முன்



    தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: விஜய் மல்லையா



    ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையா லண்டனில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்போது ‘பில்லியன் பவுண்டுகள் என்று நீங்கள் கனவு கண்டு கொண்டேயிருங்கள்’ என்றார்.

    “நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், தொடர்ந்து மறுப்பேன். நான் எந்த நீதிமன்ற விசாரணையிலிருந்தும் நழுவவில்லை, என்னுடைய தரப்புக்கான நியாயத்திற்கு போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

    நான் ஊடகங்களிடம் இது பற்றி எதுவும் தெரிவிக்கப்போவதில்லை, காரணம் நான் எதைக்கூறினாலும் திரிக்கப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் உள்ளன அது பேசும்.

    எந்தக் கடன்களும் எங்கும் திசைத்திருப்பப் படவில்லை. நீங்கள் பில்லியன் பவுண்டுகள் குறித்து கனவு கண்டு கொண்டேயிருங்கள், ஆதாரமில்லாமல் உங்களால் எதையும் நிரூபிக்க முடியாது. 

    நான் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா அணிக்கு உற்சாகமூட்ட செல்கிறேன், அது ஊடக விவகாரமாகி விட்டது. எனவே நான் எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது. ஸ்டேடியத்துக்கு வெளியே இருவர் குடித்து விட்டு ‘திருடன்’ என்றனர், ஆனால் பலரும் என் நலனை விசாரித்தார்கள் என்றார் மல்லையா.

    இந்தியாவும் இங்கிலாந்தும் நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் 1992-ம் ஆண்டு கையெழுத்திட்டனர், ஆனால் இதுவரை ஒருவர் மட்டுமே இதன் படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றிய இறுதி விசாரணை டிசம்பர் 4-ம் தேதியன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad