மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி தமிழிசைக்கு தெரியாது -வைகோ.
மத்திய பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தெரியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே -17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை சந்தித்தபின், வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசின் தூண்டுதல்படியே திருமுருகன் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, மத்திய உளவு அமைப்பான ராவின் தூண்டுதல் இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும், அதை உறுதியாக சொல்லமுடியாது எனவும் பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை