பட்டாசு உற்பத்தி ஆலைகள் வரும் 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம்.
பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரி விகித்ததை குறைக்க வலியுறுத்தி ஜூன் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. பட்டாசுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், வரியை 5 அல்லது 12 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியும், இம்மாத இறுதியில் வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை