Header Ads

  • சற்று முன்



    அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் ஏன் சேர்ப்பதில்லை?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.


    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
    இதை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி பாடத்தை நடத்துவதால், ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதியளித்ததில் உபயோகம் இல்லை என குறிப்பிட்டார். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்? எனவும் அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
    2012க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன என்றும், அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? என்றும் நீதிபதி அரசிடம் விளக்கம் கேட்டார்.
    தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? என்றும், ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா ? என்றும், அரசு பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் நாட காரணம் என்ன ? என்றும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்ய கூடாது? என்றும் அவர் வினவினார்.
    ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது? என்றும், பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது? என்பன உள்ளிட்ட 20 கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.
    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad