Header Ads

 • BREAKING  இரிடியம் மோசடி கும்பலிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த திரைப்பட தயாரிப்பாளர்.


  இரிடியம்..! இது அரியவகையான உலோகம் இது வீட்டில் இருந்தால்… பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்..! அதிர்ஷ்டம் கதவை தட்டும்..! இரிடியம் அவ்வளவு எளிதில் கிடைக்காது ரேர்.. பீஸ்..!
  வெளி நாட்டுல 2 ஆயிரம் கோடிக்கு விலைக்கு போகுது..! உங்களுக்காக 2 கோடிக்கு தர்ரேன்னு யாராவது அளந்து விட்டா ? உஷாரா இருங்க..! இரிடியம் அப்படி எந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிடாது..!
  சதுரங்கவேட்டை திரைப்படத்தில் வருவதை போல வார்த்தைகளில் தேன் தடவி… தித்திக்க பேசி அதிசயக்கவைத்தால் உங்களிடம் இருந்து பணத்தை பறிக்கபோகிறார்கள் என்று அர்த்தம்..! அப்படித்தான் குரங்கு கையில பூ மாலை படத்தின் இணை தயாரிப்பாளர் கண்ணன் என்பவரை அணுகிய இரிடியம் மோசடி கும்பல் சாதுர்யமாக பேசி பணத்தை பறித்து உள்ளது.
  சென்னை மண்ணடியை சேர்ந்த ரவீந்திரகுமார் என்பவர் தலைமையிலான அந்த கும்பல், தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை வெளி நாட்டுக்காரர் ஒருவர் 2000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் அந்த பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வர 2 கோடி ரூபாய் தேவை படுகின்றது. அதனை கொடுத்தால் இரண்டு மடங்கு பணம் தருவதாக திரைபடதயாரிப்பாளர் கண்ணனிடம் ஆசை காட்டியுள்ளனர்.
  முதலில் 25 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு நாள்கணக்கில் காத்திருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் தனது பணத்தை திரும்ப பெற்றுள்ளார். மீண்டும் கண்ணனை அனுகிய அந்த குமபல் அவரை கோவை மாவட்டத்தில் உள்ள மலை பகுதி ஒன்றிற்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு அந்த கும்பலின் தலைவன் ராகுலை சந்தித்துள்ளனர். அவனது மயக்கும் பேச்சில் மதியிழந்துள்ளார் கண்ணன். இரிடியம் மிகவும் சக்தி வாய்ந்தது சாதாரண உடையில் அதன் முன்னால் இருந்தால் சக்தி தாக்கி விடும் என்று ஏமாற்றி கவச உடை ஒன்றை அணி செய்துள்ளனர்.
  காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு சென்று காத்திருந்த கண்ணனிடம் மிகவும் அதிசயிக்கதக்க பொருள் போல இரிடியம் கலந்த ரைஸ் புல்லிங் உலோகத்தை காட்டி உள்ளனர். அந்த உலோகம் அரிசியை தன்னூர் ஈர்த்து கொள்வதை பார்த்து வியந்து போயிருக்கிறார் கண்ணன், பின்னர் வெளி நாட்டு வங்கியில் இருந்து தங்கள் பெயருக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளது போல போலியான வங்கி கணக்கை கண்ணனிடம் காட்டி உள்ளனர்.
  2 கோடி ரூபாய் கொடுத்தால் 50 கோடி ரூபாய் தருகிறேன் என்றதும் பேராசை கண்ணை மறைக்க கண்ணன் தனது வங்கி கணக்கில் இருந்து 19 லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுத்துள்ளார். அவ்வளவு தான் அதன் பிறகு இவருக்கு பணம் வரவில்லை . ராகுலையும் காணவில்லை..! ரவீந்திரகுமாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..! தான் எமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணன் புகார் அளித்தார்.
  அவரை போலவே அமீர் என்பவர் 5 லட்சம் ரூபாய் கொடுத்து எமாற்றம் அடைந்துள்ளார். முகமது என்பவர் 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இவர்களை போல ஏராளமான செல்வந்தர்கள், தங்களிடம் இருக்கும் பணத்தை குறுக்குவழியில் இரட்டிப்பாக்க முயன்று மொத்த பணத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். மோசடி கும்பலை சேர்ந்த ரவீந்திர குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர் மோசடி கும்பல் தலைவன் ராகுலை தேடிவருகின்றனர்.
  இரிடியம் நிகழ்ந்தகூடிய ஒரே கண்கட்டுவித்தை இந்த மாதிரி அரிசியை தன்னுள் ஈர்ப்பது மட்டுமே..! இதனால் யாருக்கும் எந்தவித பயனும் கிடையாது.
  பழைய இரும்புக்காவது பேரீச்சம் பழம் கிடைக்கும் இரிடியத்தை கொண்டு போய் கொடுத்தால் அது கூட கிடைக்காது ..! எனவே மீண்டும் எச்சரிக்கையாய் இருங்கள் ஏமாந்து போகாதீர்கள் என்பதே காவல்துறையின் வேண்டு கோளாக உள்ளது

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad