Header Ads

  • BREAKING



    ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத்தேர்வு.


    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 75 மையங்களில் வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
    ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரி கிளையில் 150 இடங்களும், காரைக்கால் கிளையில் 50 இடங்களும் என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. வரும் கல்வி ஆண்டிற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
    நுழைவுத் தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 75 நகரங்களில் 339 மையங்களில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும், மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad