மகாராஷ்டிர மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்..
மகாராஷ்டிர மாநிலத்தில் நள்ளிரவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 8 ஆக பதிவானது.
மகாராஷ்டிராவின் தென்பகுதியில் உள்ள சாங்லி, கோலாப்பூர் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகளில் ஐந்து முதல் எட்டு வினாடிகள் வரை நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். கொய்னாவை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து 120 கிலோமீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கொய்னா அணையில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை