மாவா போதைப்பொருள் தயாரித்த 3 பேர் கைது.
தடைசெய்யப்பட்ட மாவா போதைப்பொருளை தயாரித்து சென்னை முழுவதும் விநியோகித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள கே.வி.என்.புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாவா போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவா போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களையும், மாவா பொட்டலங்களையும், 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்த போலீசார், அவர்கள் சென்னையில் யார் யாருக்கு போதைப்பொருள் பொட்டலங்களை விநியோகித்தனர் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை