கயத்தார் புதிய தாலுகாவில் கிராமத்தை இணைத்ததற்கு எதிர்ப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புதிய தாலுகாவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாவட்டத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் தாலுகாக்களுக்கு உட்பட்ட சில பகுதிகளை ஒருங்கிணைத்து கயத்தாரை தலைமையிடமாகக் கொண்ட புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. இவ்வாறு கோவில்பட்டி அருகே உள்ள கரடிக்குளம் ஊராட்சியும் இணைக்கப்பட்டது.
அங்கிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கயத்தாருக்கு செல்வது சிரமம் என்பதால், தங்கள் கிராமத்தை மீண்டும் கோவில்பட்டி தாலுகாவில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி, கரடிக்குளம் கிராமத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை