தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி அறவே இல்லை – அரிசி உற்பத்தியாளர் மற்றும் வணிகர் சங்கம் விளக்கம்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்பது அறவே இல்லை என்று அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் மற்றும் வணிகர் சங்கத்தின் தலைவர் துலாசிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். பிளாஸ்டிக் அரிசி வதந்திகளால் அரிசி விற்பனையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் துலாசிங்கம் தெரிவித்தார்.
இந்தியாவில் போதிய அளவு உற்பத்தி செய்யப்படும் போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை