Header Ads

  • சற்று முன்



    காணாமல் போன இளைஞர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு -பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுடன் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டிருந்ததாக தகவல்.


    சேலம் தருமபுரி மாவட்ட எல்லையில், ரயில்வே தண்டவாளம் அருகே உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிணமாக கிடந்த இளைஞருக்கும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த அடுத்த வடுகம்பட்டி. வடுகம்பட்டியில் இருக்கும் தனது வீட்டின் அருகே, தனக்கு சொந்தமான 2 கார்களை மாரியப்பன் நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமையன்று பெரிய வடுகம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரியப்பனின் கார் மீது மோதியுள்ளார். அப்போது மாரிப்பன், சதீஷ் தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஊர் மக்களால் விலக்கிவிடப்பட்டுள்ளது. இதன் பிறகு, சதீஷ் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
    இந்நிலையில், காணாமல் போன சதீஷ், சேலம் தருமபுரி மாவட்ட எல்லை கிராமமான டேனிஷ்பேட்டையில், ரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள புதர் ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர், ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், சதீஷ் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    பிணமாக மீட்கப்பட்ட சதீஷின் உடல், ஆய்வுக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிணமாக கிடந்த சதீஷின் உடலை போலீஸாருக்கு தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றதாகவும், சதீஷுக்கும் மாரியப்பனுக்கும் நிகழ்ந்ததாக கூறப்படும் தகராறு குறித்த தகவல் தெரிந்தபிறகே அவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad