Header Ads

  • BREAKING



    டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்.


    இரட்டை இலை சின்னத்தைப்பெற லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் அவரது நண்பர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இருவரும் தலா ரூ.5 லட்சம் செலுத்துமாறும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    டிடிவி.தினகரன், மல்லிகார் ஜுனா ஆகியோர் டெல்லி தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad